Sunday 20 September 2015

அறப் படிச்ச முட்டாளை பிரதிநிதியாகி........ உன் தலையில் நீயே மண்ணை அள்ளிக் கொட்டி விட்டாயடா தமிழா?

இதற்குத் தானா ஆசைப்பட்டாய் ? 

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதி விசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும் என்று சுமந்திரன் கூறுகிறானே. அவனுக்கு அறிவில்லையா? அமெரிக்கா ஒரு அரசியல் தீர்மானம் கொண்டுவந்து ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்றால், உலகமே ஏற்றுக்கொள்ளுமே. இதில் எங்கே நீதி விசாரணை இருக்கிறது ? எல்லாமே அரசியல் தான்.

ரணிலிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு அரசைக் காப்பாற்றத் துடிக்கும் சுமந்திரனும் அரசியல் செய்கிறார். விரைவில் காய்களை நகர்த்தி முடித்தால், அமைச்சர் பதவி காத்திருக்கிறது. தமிழா!! ஏமாந்தது நீ மட்டுமே.

நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என்கிறார் சுமந்திரன். பின்னர் எப்படி இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அது இனப்படுகொலைதான் என விபரமாக விளக்கித் தீர்மானம் கொண்டு வந்தார். அதை ஒருதடவை படித்திருந்தால் தெரிந்திருக்கும்.

தமிழர்களுக்குள் இருந்து அதுவும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரிடமிருந்து ‘இனப்படுகொலை மறுப்பு, பொது வாக்கெடுப்பு மறுப்பு குரல்’ வருகிறது என்பது மிக மோசமான அரசியல்.

தமிழரசுக் கட்சிக்குள் வேறு சட்டத்தரணிகள் வராதபடி திட்டம் போட்டுச் செயற்படுகிறார். ஒவ்வொருவராக ஓரம் கட்டுகிறார். சம்பந்தரின் பின்னர் கூட்டமைப்பின் முழுக் கட்டிப்பாட்டையும் தானே எடுக்கும் முயற்சி இது. தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

முதலில் தனது பக்கம் எடுக்க முயற்சி. வராதவர்களை வெளியேற்ற நடவடிக்கை. இப்போது நடவடிக்கையில் இருப்பவர்கள் ஸ்ரீதரனும், விக்னேஸ்வரனும். ஆனந்தி, சுரேஷ் ஓரம்கட்டப்பட்டு விட்டனர். மாவை ரணிலின் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு சுமந்திரனுக்கு சாமரை வீசுகிறார். எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயக அரசியல் ஒரு சர்வாதிகாரம் தான். அதுதான் இப்போது கூட்டமைப்பு நடாத்துகிறது. எவ்வளவு காலத்துக்கு இதை அனுமதிக்கப் போகிறோம்.

சுமந்திரனுக்கு எமது வலிமையான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறோம்.

Friday 18 September 2015

காணாமல் போனவர்களுக்கு விசேட சான்றிதழ்!!

காணாமல் போன குறித்த ஒரு நபர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட முடியாது. அவ்வாறானவர்களுக்கு "காணாமல் போனவர்கள்" என விசேட சான்றிதழ் ஒன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இயற்கைக்கு மாறான வகையிலான மரணங்களுக்கு உள்ளானவர்களுக்கு இவ்வாறு விசேட சான்றிதழ் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகள், இயற்கைக்கு மாறான வகையிலான உயிரிழப்புக்கள், சடலங்களை கண்டு பிடிக்க முடியாத சந்தர்ப்பங்கள் போன்ற நேரங்களில் இந்த விசேட சான்றிதழ் வழங்கப்படாது.

இது குறிப்பாக இராணுவத்தால், மற்றும் இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களுக்கும், சரணடைந்து காணாமல் போனவர்களுக்கும் இது போன்ற விஷேட சான்றிதழை வழங்கப் போகின்றார்கள். இந்த நடைமுறை காரணமாக, இன்னமும் இரகசியமாகத் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களை கொலை செய்யத் தூண்டுவதாகவும் அமையலாம்.

'கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள்', என்று ஒரு சான்றிதழ் வழங்கி, அவர்களுக்குச் சில சலுகைகளையும் நட்ட ஈடுகளையும் வழங்கி அவர்களின் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம்.

யுத்த காலத்தில் யுத்தப் பிரதேசங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளை அவை எவ்வளவு கசப்பானாலும் நாம் ஏற்றுக் கொண்டே  ஆகவேண்டி இருக்கிறது. அதற்கு வேறு வழி என்ன?

இது குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறாமல் தப்பிக்கவும் உதவப் போகிறது.

Thursday 17 September 2015

ஈழத் தமிழரின் கனவுக் கோரிக்கைகளை யார் முன்வைப்பது???

இனப்படுகொலை, சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் நீண்டகாலக் கனவுகளை கோரிக்கைகளாக சர்வதேசத்தின் முன் வைக்க வேண்டிய தருணம் இது.

உள்நாட்டு விசாரணையையே கோரும் எமது அரசியல்வாதிகள் எப்படி எமக்கு தீர்வைப் பெற்றுத் தருவார்கள். இவர்கள் நிச்சயமாக சரித்திரத்தில் துரோகிகளாகவே இடம்பிடிப்பார்.

சர்வதேச போர் குற்ற விசாரணை என்ற ஒற்றைக் கோரிக்கை!!!

இன்று ஈழத் தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நாள். தமிழக சட்டப் பேரவை ஈழத்தில் நடந்த போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றியுள்ளது ஒன்று. மற்றையது, ஐ.நா.வின் அறிக்கையில் சர்வதேச விசாரணையை கோரி இருப்பது.

எதிரிக்கும், பிராந்திய, சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கும் துணைபோகும் எமது அரசியல் தலைவர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது ஐ.நா. அறிக்கை.

ஈழப் படுகொலையில் ஐ.நா.வே முதல் குற்றவாளி!!!

இலங்கை அரசு சொன்னவுடன் வன்னியில் இருந்த தமது அலுவலகங்களை எல்லாம் மூடிவிட்டு, தம்மை விட்டுப் போகவேண்டாம் என ஓலமிட்ட மக்களையும் கைவிட்டுவிட்டு தமது பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு ஐ.நா.வெளியேறியபோது அவர்களுக்குத் தெரியாதா வன்னியில் ஒரு மனிதப் படுகொலை நடக்கப் போகிறது என்பது.

ஆனாலும், எமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குற்றவாளியிடமே நாம் நீதி கேட்டு முறையிடுகின்றோம்? ஏனென்றால், ஐ.நா. ஒரு சர்வதேச அமைப்பு. சில அரசியல் நெருக்கடியினால், தவறிழைத்து விட்டது என்பது உண்மை. அது மீண்டும் மீண்டும் தவறு செய்யாது. ஒரு பிராயோச்சித்தம் செய்து தான் செய்த தவறை உலகத்தின் கண்களுக்கு மறைத்துக் கொள்ள முற்படும் என்பதே எமது நம்பிக்கை. 

அதை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போகிறோமா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகள்!

இலங்கையில் நடைபெற்றது ஒரு போர் குற்றம் மட்டுமல்ல, அது ஒரு இனப்படுகொலையுமாகும். நீதியை நிலை நிறுத்த ஒரு சர்வதேச விசாரணை தேவை, என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய தமிழக முதல்வரையும் தமிழக அரசையும், ஈழத் தமிழர்கள் நன்றியுடன் பாராட்டுகிறார்கள்.